பாஜகவுக்கு ஆதரவாக முகநூலில் போஸ்ட் : தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்த காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 7:10 pm
Police Suspend - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : அம்பாத்துரை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சுரேஷ் பாஜக குறித்த செய்திகளை முகநூலில் பகிர்ந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தல் தலைமை காவலராக திண்டுக்கல் மேட்டுபட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரருக்கு ஆதரவாக வரும் செய்திகளை தனது முகநூலில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு ஆதரவாக காவல்துறையில் பணியாற்றி கொண்டே முகநூலில் விமர்சனம் செய்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

சுரேஷின் முகநூலில் கடந்த 2021ம் ஆண்டு பாரதமாதா சிலையுடன் உள்ள போட்டோவை PROFILE பிக்சராக வைத்துள்ளார். இந்த நிலையில் காவலர் சுரேஷின் முகநூலில் உள்ள நண்பர்களான சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சி.கே பாலாஜி மற்றும் ஓட்டல் உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அப்போது விசாரணைக்கு வந்த அவர்களுடன் செய்தி சேகரிக்க செய்தியாளர்களும் குவிந்தனர். இதையறிந்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் சி.அக.பாலாஜி, மத்திய அரசுக்கு ஆதரவாக, தமிழக அரசுக்கு எதிராக காவலர் சுரேஷ் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தது உண்மை என எங்களை எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க அழைத்தனர். ஆனால் இதை பெரிதாக்க வேண்டாம், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என கூறி அனுப்பிவிட்டனர்.

மேலும் விமர்சனம் என்பது வரத்தான் செய்யும் அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட
காவலர் சுரேஷை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.கே பாலாஜி தெரிவித்துள்ளார்.

Views: - 588

1

0