கோவை தேக்கம்பட்டி செல்ல ரெடியா? வரும் 8ஆம் தேதி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடக்கம்!!

2 February 2021, 3:34 pm
elephant Camp - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான 9 வது சிறப்பு நலவாழ்வு முகாம் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி துவங்க உள்ளது.

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கோவில் யானைகளுக்கான 9 வது சிறப்பு நல்வாழ்வு முகாம் பிப்ரவரி 8ஆம் துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான 27 யானைகள் உள்ளன.இவற்றுக்கு 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு நல்வாழ்வு முகாமை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடத்த ஒரு கோடியை 67 லட்சத்து 10 ஆயிரத்து 982 ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் முகாமுக்கு அழைத்து செல்லும் யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து கொடுத்து சான்றளிக்க வேண்டும் பாகன், உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கால்நடை மருத்துவர்கள் வாரந்தோறும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முகாம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் துவங்கியது.

Views: - 25

0

0