அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை: பூட்டை உடைத்த கொள்ளையனின் காலை உடைத்த மக்கள்…

Author: kavin kumar
25 December 2021, 2:52 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஐந்து சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியை சார்ந்த புல்லார்கவுண்டர் மகன் வெங்கடேசன். இவர் கோயம்புத்தூரில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமேஷ் மற்றும் இவருடைய நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மட்டும் ஒன்றரை லட்சம் பணத்தை திருடியுள்ளனர்.

அதன்பிறகு, பக்கத்து வீட்டில் இருக்கும் ஸ்ரீரங்கம் என்பவரின் வீட்டிற்கும் வந்து கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். அதனை பார்த்த பொதுமக்கள் ஒன்று கூடி ரமேஷை பிடித்து அடித்து காலை உடைத்துள்ளனர். ரமேஷுடன் வந்த 2 மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் பொது மக்களிடம் கொள்ளையனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 552

0

1