கிறிஸ்தவ ஆலயத்தில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 4:22 pm
SP Velumani Inspection - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் சேதப்டுத்தினர் அதை முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்தி சென்றனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வாயிலில் புனித செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தற்பொழுது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வின்போது மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கழக அமைப்பு செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 316

0

0