பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை: சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலாக பணம் பறிமுதல்…

Author: kavin kumar
1 October 2021, 5:57 pm
Quick Share

வேலூர்: வேலூர் பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம்,வேலூர் வேலப்பாடி பகுதியில் மாவட்ட பத்திரபதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் வனிதா மற்றும் ஆய்வாளர் விஜய் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்து உள்ளேயே சோதனை செய்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பத்திரபதிவுத்துறையின் ஊழியர்களின் அறைகள் பத்திரபதிவுத்துறையில் உள்ள முகவர்கள் உள்ளிட்டவர்கள் அங்கிருந்த அனைவரிடமும் சோதனை செய்து பணம் சுமார் ரூ.,3 லட்சத்திற்கும் மேல் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இதில் கணக்கில் வராதபணம் எவ்வளவு என சோதனை முடிந்த பின்னரே தெரியவரும். பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் பணி முடியும் முன்னரே திடீரென லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புகுந்து ஆய்வு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 566

0

0