திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டு வாசலில் இளம்பெண் தர்ணா…!!
18 November 2020, 11:40 amதிருவாரூர்: ஜாதியை காரணம் காட்டி காதலித்த காதலனின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுப்பதாக காதலன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராம் பிரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார் .இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதனால், விக்னேஷின் பெற்றோரோ ராம் பிரியா மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் அவரை திருமணம் செய்து கொண்டாள் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதால் விக்னேஷ், ராம் பிரியாவின் காதலை துண்டித்துள்ளார். ராம் பிரியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விட்டனர்.
வருகின்ற 25ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் ராம் பிரியா வீட்டிற்கு சென்ற விக்னேஷ், என்னை தவற யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடnது மீறினால் நாம் எடுத்து கொண்ட போட்டோக்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் காட்டிவிடுவேன் என்றும் என்னுடன் வந்து விடு நான் கூட்டி சென்று விடுகின்றேன் என்று ராம் பிரியாவிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.
இதனை நம்பி இராம் பிரியா விக்னேஷ் வீட்டிற்கு சென்ற போது அவரது பெற்றோர்கள் ராம் பிரியாவின் ஜாதி பெயரை சொல்லி திட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்கள் மேலும் தங்களது வீட்டை பூட்டி விட்டு விக்னேஷ் அவரது பெற்றோருடன் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் இராம்பிரியா தன்னை காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அவர் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றார். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.