தமிழகத்தில் முதன்முறையாக பொக்லைன் வாகனத்தை இயக்கும் பெண் : கோவையை சேர்ந்த இரும்பு மங்கைக்கு குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2021, 4:56 pm
JCB Women Driver- Updatenews360
Quick Share

கோவை : தமிழகத்தின் முதல் முறையாக பொக்லைன் வாகனத்தை ஓட்டும் பெண் முறையான பயிற்சிகளை கற்று ஒட்டுநர் உரிமத்தையும் பெற்று அசத்தியுள்ளார்.

பெரிய பெரிய கட்டிடங்களை இடித்து தள்ளும், ஆழமான குழிகளை தோண்டிடும் ராட்சத பொக்லைன் இயந்திரங்களை பார்த்திருப்போம். சிறுவயதில் நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்திய இந்த இயந்திரத்தை இயக்கும் நபர் நமக்கு ஹீரோவாகவே தெரிந்திருப்பார்.

அவ்வளவு பெரிய இயந்திரத்தை ஒற்றை ஆண் அசாத்தியமாக கையாள்வதை பார்த்து பிரம்மிப்பும் ஏற்பட்டிருக்கும். இப்போது பெண் ஒருவர் இந்த ராட்சத பொக்லைன் இயந்திரத்தை இயக்க துவங்கியுள்ளார். தமிழகத்திலேயே பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அங்காள ஈஸ்வரி.

அங்காள ஈஸ்வரிக்கு கோவையை சேர்ந்த சாரு சிண்டிகேட் நிறுவத்தார் பொக்லைன் இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை அளித்துள்ளனர். மன உறுதி மட்டும் போதும் எந்த இயந்திரங்களையும் பெண்களும் இயக்க முடியும் என்கிறார் சாரு சிண்டிகேட் நிறுவனத்தின் நிறுவனர்.

பெண்கள் அவரவர் துறைகளில் சாதித்து வரும் சூழலில், தனது ஓட்டுநர் பணிலும் உச்சத்தை தொட்டுள்ளார் தமிழகத்தின் இந்த இரும்பு மங்கை என்றால் அது மிகையாகாது.

Views: - 318

0

0