கார் மீது உரசி மினி பேருந்தில் சிக்கிய இருசக்கர வாகனம் : 4 வயது குழந்தை பரிதாப பலி.. தாய் கவலைக்கிடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 3:40 pm
Tirupur Child Dead -Updatenews360
Quick Share

திருப்பூர் : ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில் , திருப்பூரை சேர்ந்த தக்‌ஷனா என்ற 4 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு 4 வயதில் தக்‌ஷனா என்ற பெண் குழந்தை உள்ளது.

தீபாவின் தாய் வீடு பூம்புகார் நகரில் உள்ளது. இந்நிலையில் , இன்று தீபா தனது குழந்தை தக்‌ஷனாவுடன் தனது அம்மா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது , இருசக்கர வாகனத்தின் பின்னால் மினி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்ததாகவும் , அதே இடத்தில் சாலையின் பக்கவாட்டில் கார் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் இரு சக்கர வாகனம் காரில் உரசி நிலை தடுமாறி தீபாவும் தக்‌ஷனாவும் சாலையில் விழுந்துள்ளனர்.

மினி பேருந்தின் பின் சக்கரம் குழந்தை மற்றும் தாயின் மீது ஏறி சில அடி தூரம் இழுத்து வந்துள்ளது. இந்த விபத்தில் 4 வயது குழந்தை தக்‌ஷனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தீபா பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 584

0

0