10 ஆண்டுகளுக்கு பின் களைகட்டிய மீன்பிடி திருவிழா : ஆர்வத்துடன் குளத்தில் இறங்கிய பொதுமக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 5:36 pm
fish Festival 1 -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : 10 பத்து ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீனை அள்ளிச் சென்றனர் .

திண்டுக்கல் அருகே உள்ளது புகையிலைப்பட்டி இந்த ஊருக்கு சொந்தமான வண்டிகாரன் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடத்தப்படும் பத்து ஆண்டு காலங்களாக போதிய மழையின்மை காரணத்தால் இந்த குளத்தில் நீர் தேங்காத வண்ணம் இருந்ததால் இந்த குளத்தில் மீன்பிடி திருவிழாவிவானது நடத்தப்படாமல் இருந்தது.

சமீபத்தில் பெய்த மழையால் இந்த குளத்தில் நீர்கள் தேங்கி இருந்ததால் மீன்கள் வளர்க்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின் இந்தக் குளத்தில் கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது.

இந்த மீன்பிடி திருவிழாவில் புகையிலைப்பட்டி சுற்றியுள்ள மணியக்காரன்பட்டி , மடூர், ராஜக்காபட்டி, கஸ்தூரி நாயக்கம்பட்டி, பெரியகோட்டை பகுதி கிராமத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த குளத்தில் இறங்கி விரால், கெண்டை, ரோகு, கட்லா, கெளுத்தி மீன் உள்ளிட்ட பலவகையான மீன்களை ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் மீன்களை பிடித்தனர்.

இந்த குளத்தில் அனைத்து பொதுமக்களுக்கு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் ஆர்வத்துடன் குளத்தில் இறங்கி மீன்களை அள்ளிசென்றனர் .

Views: - 696

0

0