ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்: 15 ஏக்கர் தேடியும் உடல் கிடைப்பதில் தொய்வு..!

Author: Udhayakumar Raman
17 October 2021, 10:22 pm
Quick Share

கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடலை சுமார் 15 ஏக்கர் பரப்பில் தேடியும் இன்னும் உடல் கிடைக்கவில்லை.

தொண்டாமுத்துார் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனுார் குட்டைக்கு செல்கிறது. இப்பள்ளத்தில், கன மழையால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா, 55 மற்றும் மூன்று பேர், நேற்று தோட்ட வேலைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது, ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்து செல்லப்பட்டார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள், தொண்டாமுத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இரவு 7:30 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. மீண்டும் இன்று காலை, 6:00 மணி முதல்,தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவு தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை.தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் பெண்ணின் உடலை தேடி வருகின்றனர்.

Views: - 205

0

0