மணல் சிற்பம் மூலமாக 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு

Author: Udhayakumar Raman
25 March 2021, 3:57 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மணல் சிற்பம் மூலமாக 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.விஜயலட்சுமி பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மணல் சிற்பத்தில் நேர்மையான தேர்தல் ,

1950 வாக்காளர் உதவி எண் போன்றவை இடம் பெற்றிருந்தன. இயல் இசை நாடகம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மணல் சிற்பம் மட்டும் கலை நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.விஜயலட்சுமி பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

Views: - 57

0

0