சாராயம் விற்ற 2 பேர் கைது:20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

Author: Udhayakumar Raman
2 September 2021, 4:30 pm
Quick Share

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டி டாஸ்மாக் பின்புறமுள்ள விவசாய நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, சித்ரா ஆகியோர் சாராய விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம். பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 400 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 141

0

0