கோவையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது 2,340 வழக்குகள் பதிவு: 150 வாகனங்கள் பறிமுதல்

17 May 2021, 9:03 pm
Quick Share

கோவை: கோவையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவுசெய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டடுள்ளனர்.

நாடுமுழுவதும் கொரானா இரண்டாம் அலை வேகமாகபரவி வருவதை அடுத்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுயாக காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்க உத்திரவிட்டுள்ளது. அதனையடுத்து கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் கோவை புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறியதாக 2 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 150 வாகனங்களையும் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் மாநகர் பகுதிகளில் 2,340 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டார் வாகன சட்டத்தில் 1,114 வழக்குகளும் 15 வாகனங்களை போலீசார் பறிமுதலும் செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 54

0

0