திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது:கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
29 July 2021, 5:33 pm
Quick Share

அரியலூர்: திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 200 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருமானூர் காவல்நிலைய எஸ்ஐ செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருமானூர் கால்நடை மருந்தகம் அருகே இருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயற்சித்து உள்ளனர். அவர்களை மடக்கிபிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததுதெரியவந்தது.இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த கணேஷ்குமார், மணிகண்டன், ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 200 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 108

0

0