கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் அருகே மது பாட்டில்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் அடுத்த அத்திப்பாக்கத்தில், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன் ராஜசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த பஸ்சை சோதனை செய்ததில், டிராவல் பேக்கில் 895 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை செய்ததில், பரனுார் காலனியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் சரவணன், மரூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சின்னராஜ், பெங்களூருவைச் சேர்ந்த ஜான்பாஸ் மகன் மூசாந்த் என தெரியவந்தது.உடன், மூவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
0
0