ஜெயங்கொண்டத்திலிருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம்

8 July 2021, 8:33 pm
Quick Share

அரியலூர்: இரண்டாம் நிலை கொரோனா தொற்று காரணமாகவும் கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் ஜெயங்கொண்டத்திலிருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையார்பாளையம், தா.பழூர் போன்ற காவல் நிலையங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மறைமுக மது பாட்டில்கள் விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது நிலவி வரும் இரண்டாம் நிலை கொரோனா தொற்று காரணமாகவும்

கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திருச்சி மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சாமிநாதன் மற்றும் காவலர் முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 கைதிகளை உரிய கொரோனோ பரிசோதனையுடன், மருத்துவருடைய ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Views: - 139

0

0