பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 400 பேர்

21 January 2021, 2:33 pm
Quick Share

திருச்சி: வீர முத்தரையர் பேரவை,வ.உ.சி பேரவையைச் சேர்ந்த 400 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா மாநில பொதுச் செயலாளர் ராம. சீனீவாசன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. வீர முத்தரையர் பேரவை துறையூர் சட்டமன்ற பொறுப்பாளர் மா்ஸ் மகேந்திரன் தலைமையில் 200பேர் மற்றும் வ.உ.சி.பேரவையின் புறநகர் மாவட்ட தலைவர் பாலாஜிபிள்ளை தலைமையில் 200 பேர் என 400 பேர் பாரதிய ஜனதா கட்சுயில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்ரமணியன், மாநில செயலாளர், பார்வதிநடராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட பார்வையாளர் தங்கராஜையன், கோட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, விவசாய அணி மாவட்ட தலைவர் மணவை சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் சண்முகம்,மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில செய்தி தொடர்பாளர் ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியன் பேசியதாவது:- மாநில தலைவர் முருகன் அறிவுறுத்தலின் படி புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மாற்றுக் கட்சி இயக்கத்தினர் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
வவுசி பேரவையின் புறநகர் மாவட்ட தலைவர் பாலாஜிபிள்ளை தன் ஆதரவாளர்களுடனும்,

வீர முத்திரையர் பேரவை துறையூர் சட்டமன்ற பொறுப்பாளர் மாஸ்மகேந்திரன் தன் ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாநில தலைவர் முருகன் கூற்றுப்படி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆக்கப்பூர்வமாக நல்ல ஒரு அழுத்தமாக இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பயணிப்பார்கள் என கூறினார்.

Views: - 6

0

0