14 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 571 பேருக்கு கொரோனா

30 August 2020, 3:40 pm
corona virus new 12- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.

உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 571 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

அதில் புதுச்சேரியில் 516 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், ஏனாமில் 42 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபர்க்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் 4,938 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க 8968 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் புதுச்சேரியில் 9 நபர்களும், ஏனாமில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 14127 ஆக உயர்ந்துள்ளது.