கட்டுமான பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி தவறி விழுந்து பலி

18 May 2021, 8:59 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28) திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் இவர் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி நான்காவது மாடியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்த சக தொழிலாளிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 38

0

0