மகன்-மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அப்பா-மகன் தற்கொலை

19 August 2020, 9:41 pm
Quick Share

தேனி: ஆண்டிபட்டியில் மகன் மற்றும் மனைவி இறந்த துக்கத்தில் அப்பா, மகன் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் டீ சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், வசந்த், சசிகுமார் என 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு ஸ்டேட் பேங்க் அருகில் ஜவுளிக்கடை ஒன்று வைத்து உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது உலகெங்கும் கொரோனோ தொற்று பரவிவருகின்றன. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள எல்லைகளில் பரிசோதனை செய்த பிறகே அவரவர் எல்லைக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இளைய மகன் சசிகுமார் மகாராஷ்டிர மாநிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதனால் தேனி மாவட்ட சோதனைச்சாவடியில் உள்ள மருத்துவ முகாமில் அவருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தனிமைப்படுத்துவதற்காக போடி தனியார் கல்லூரியில் உள்ள முகாமில் அழைத்துச் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டனர். இந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் வந்ததுள்ளது.

மேலும் மனமுடைந்து காணப்பட்ட சசிகுமார் விரக்தியில் கடந்த மே 17ம் தேதி அன்று முகாமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவருடைய தாய் அன்று முதல் மனமுடைந்து மன உளைச்சலுடன் இருந்துள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமை இரவு அவரின் தாயாரின் உடல் நலக் குறைவினால் திடீரென உயிரிழந்துவிட்டார்.

மகன் மற்றும் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததினால் மணிகண்டன் மற்றும் அவருடைய மகனும் இருவரும் மனம் உடைந்து அவர் ஜவுளிக்கடை நடத்தி வந்த கடையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் அப்பாவும் மகனும் தற்கொலை செய்து கொண்டதால் விசாரணை பதிவுசெய்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 36

0

0