தொழிற்சாலைக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் மின் ஒயர் உரசியதில் தீ விபத்து.!

1 March 2021, 10:32 pm
Quick Share

காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே தொழிற்சாலைக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் மின் ஒயர் உரசியதால் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்மதுரை(28). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு காட்ராம்பாக்கம் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது லாரியின் மேலே சென்ற மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு கழிவுகள் எரிய தொடங்கின.

இதனைக் கண்டு சுதாரித்துக்கொண்ட சேர்மதுரை லாரியை நிறுத்தி விட்டு வெளியேறினார். தொடர்ந்து விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு லாரி முழுவதும் தீ பரவாமல் துரிதமாக தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Views: - 0

0

0