சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது

Author: Udayaraman
27 July 2021, 8:52 pm
Quick Share

சென்னை: மாதவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் அடுத்த ரோஜா நகரில் மாதவரம் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் துணைப் பதிவாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்த பதிவு அலுவலகம் குறித்து பொது மக்களிடையே இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இருந்து சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் 5 போலீசார் மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கிருஷ்ணசாமி மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம் அதிரடி சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ரசாயன கலவை பூசப்பட்ட10 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.இந்த பணத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ச்சியாக அவர்கள் இருவரிடமும் 5 மணி நேரம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.பிறகு அவர்கள் லஞ்சப் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 140

0

0