அங்கன்வாடிப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் பணி நியமன ஆணை

Author: kavin kumar
10 October 2021, 2:55 pm
Quick Share

திருச்சி: திருச்சி அங்கன்வாடிப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் பணி நியமன ஆணையை அமைச்சர் நேரு வழங்கினார்

தமிழகத்தில் இன்று இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பணியின்போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள்
4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மாவட்டப் பிரமுகர் வைரமணி அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 259

0

0