கொரோனாவின் தீவிரத்தால் தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் அரியலூர்
22 August 2020, 2:49 pmஅரியலூர்: கொரோனாவின் தீவிரத்தால் தினமும் கிருமி நாசினி கொண்டு வணிக பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் சுத்தம் செய்ய முடிவு செய்யபட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் நகர பகுதிகளில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 40 சதவித பேர் நகர பகுதிகளில் பாதிக்கபட்டு உள்ளனர். இந்நிலையில் அரியலூர் நகராட்சி சார்பாக அரசு தலைமை மருத்துவமனை, சித்த மருத்துவத்துடன் கூடிய கொரோனா சிகிச்சை பிரிவு, வங்கி ஏடிஎம்கள் மற்றும் தடை செய்யபட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்களால் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யபட்டு வருகிறது.
அதுபோக தற்போது ஒரு நாளுக்கு ஒரு வார்டு பகுதி என வணிக பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் தினமும் சுத்தம் செய்ய முடிவு செய்யபட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே நாமும் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து அரியலூர் நகர பகுதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளபட்டுள்ளது.