மணல் கொள்ளையை கண்டித்து விரைவில் போராட்டம்.! கிராம மக்கள் முடிவு

17 August 2020, 1:50 pm
Ariyalur Sand Theft - Updatenews360
Quick Share

அரியலூர் : சட்ட விரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வடுகபாளையம் ஊராட்சிக்குட்டபட்ட பகுதியில் சவுடு மண் எடுப்பதாக அனுமதி பெற்று கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அண்மையில் வடுகபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் யோகவல்லி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தியதாகவும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரிப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பகுதியில் அதிகளவில் மணல் திருடுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் என்றும் உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் திருட்டை தடுக்க வில்லையென்றால் மிகப்பெரியளவில் போராட்டம் நடத்தபடும் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.