அசாமில் நடைபெற்ற சாலை விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

24 October 2020, 12:00 am
Quick Share

காஞ்சிபுரம்: அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்தில் அந்த டிரக்கில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் காயமுற்றனர்.இதில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள செம்பரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செம்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குப்பன் நங்கை தம்பதிகளின் மகனாகிய ஏகாம்பரம் கடந்த 2000ம் ஆண்டு ராணுவப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய மனைவி பெயர் குமாரி (வயது 35), மகன் ஆதித்யா (வயது 16) ஜெனி மகள் (14 வயது) ஆகிய இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இன்னும் ஆறு மாதங்களே பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் இன்று அசாமில் நடைபெற்ற சாலை விபத்தில் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது. உயிரிழந்த ஏகாம்பரத்தின் உடல் மூன்று நாட்களில் காஞ்சிபுரம் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது .ஏகாம்பரத்தின் மறைவுச் செய்திக் கேட்டு அவரது குடும்பம் மட்டுமின்றி அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Views: - 12

0

0