முதல்வர் வேட்பாளர் அறிவித்ததில் எந்தவிதமான சிக்கலும் இல்லை: சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி

By: Udayaraman
9 October 2020, 9:10 pm
Quick Share

ஈரோடு: 2021 தேர்தல் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அருகே இருசக்கர வாகன விற்பனை நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் கருப்பணன், 2021- சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் முதல்வர் என்றார். 11- பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இருப்பவர்கள் ஆண்களா,பெண்களா என பார்ப்பதை விட நேர்மையும் திறமையானவர்கள் நியமிக்கபட்டுள்ததாக கூறிய அவர், முதல்வர் வேட்பாளர் அறிவித்ததில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்றும் ஒருமனதான அறிவிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Views: - 27

0

0