மாமூல் கேட்டு தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் : பேருந்து ஊழியர்கள் சாலை மறியல்

Author: kavin kumar
29 January 2022, 4:40 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பேருந்துகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் பேருந்து ஊழியர்களை தாக்குவதை கண்டித்தும், இதன் மீது உரிய நடவடிக்கை காவல் துறை எடுக்க வலியுறுத்திம் தனியார் பேருந்து ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து சிறிது காலம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி பத்துக்கண்ணு வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் ஊசுட்டேரி படகுத்துறை மற்றும் பத்துக்கண்ணு இடையில் பேருந்துகளில் ஏறும் ரவுடிகள் கண்டக்டரிடம் மாமுல் கேட்டும், தர தயங்கினால் அவர்களை தாக்கியும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை கிண்டல் செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பேருந்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ஒரு சிலரை மட்டுமே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும்,

தொடர்ந்து ரவுடிகளின் அராஜகம் தினந்தோறும் இந்த வழித்தடத்தில் அதிகரித்து வருவதாகவும், ரவுடிகளின் அராஜகத்தை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பத்துக்கண்ணு சந்திப்பில் புதுச்சேரி அரசும், காவல்துறையும் விரைந்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரவுடிகளை கைது செய்யும் காவல்துறையினர் அவர்கள் பினையில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பேருந்து ஊழியர்களின் மறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி- திருக்கனூர் -விழுப்புரம் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 433

0

0