கிழே கிடந்த பணம் மற்றும் ஆவணங்களை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

12 January 2021, 3:33 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே கிழே கிடந்த பணம் மற்றும் ஆவணங்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு சால்வை போர்த்தி கௌரவித்தார் காவல்துறையினர்

விருதுநகர் மாவட்டம் குமார லிங்கபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அடைக்கலாம். இவர் விருதுநகரில் இருந்து குமாரலிங்கபுரம் திரும்பி சென்ற போது விருதுநகர் அருகே உள்ள மீசலூர் பிரிவில் பார்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த அடைக்கலம் அதில் ரூ 3700 மற்றும் வங்கி ஏடிஎம் கார்டு ஆதார் கார்டு வாகன ஓட்டுநர் உரிமம் வாகன உரிமம் இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பார்ஸ்யை அருகே உள்ள ஆம்த்தூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்தியிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த பார்ஸ்யில் இருந்த ஆதார் கார்டு கொண்டு அந்த சிவகாசியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் உடையது என கண்டறியப்பட்டு, ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு வெற்றிவேல் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் மூலமே வெற்றிவேல்யிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்டெடுத்த பொருளை காவல்துறையிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டி காவலர்கள் அடைக்கலத்தை பாராட்டி சால்வை போர்த்தி கௌரவித்தனர். ஆட்டோ ஓட்டுநர் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Views: - 4

0

0