கனமழையால் வாய்காலில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்: 8 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு…

Author: Udhayakumar Raman
30 November 2021, 5:45 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழையால் வாய்காலில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் 8 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார்.

வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரியில் கடந்த 20 ஆம் தேதியன்று கனமழை பெய்தது மேலும் அன்றைய தினம் வெள்ளவாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ்(54) என்பவர் எதிர்பாராத விதமாக வெள்ளவாரி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார் இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் தேடியம் அவர் கிடைக்க வில்லை. இந்நிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் இன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெட்டியார்பாளையம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை கைப்பத்திய போது ஆட்டோ ஓட்டுநர் கனகராஜின் உடல் என்பது தெரியவந்தது. 8 நாட்களுக்கு பின்னர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 175

0

0