வாகா முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார்பயணம் நிறைவு.!

29 January 2021, 5:48 pm
Quick Share

கன்னியாகுமரி : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி வாகா எல்லையில் தொடங்கிய கார் பயணம் கன்னியாகுமரியில் நேற்று நிறைவடைந்தது.

32 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நாடுமுழுவதும் நடந்துவருகிறது.இதனை முன்னிட்டு டிரவ் ஸ்மார்ட்,டிரவ் ஸேவ் என்ற அமைப்பு சார்பில் 5 பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார் பயணம் கடந்த 18-ம்தேதி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தொடங்கிய இந்த பயணம் டெல்லி, ஜெய்ப்பூர், உதய்பூர், மும்பை, கோவா, கோலாப்பூர், கோழிகோடு,

திருவனந்தபுரம் வழியாக 3 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரத்தை கடந்து நேற்று மதியம் கன்னியாகுமரி காந்திமண்டபம் முன்பு நிறைவடைந்தது. கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் பயணத்தை நிறைவு செய்துவைத்தார்.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன்,போக்குவரத்து பிரிவு ஜாய்சன்,வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர்,ராமச்சந்திர குட்டண்ணா,ராகுல்குமார்,ஆனந்தன் வேணுகோபால்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0