புற்றுநோயும் வாழ்க்கை முறையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

4 February 2021, 4:21 pm
Quick Share

சேலம்: சேலத்தில் புற்றுநோயும் வாழ்க்கை முறையும் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சேலத்தில் பிரசித்தி பெற்ற விநாயகா மிஷன்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் புற்றுநோயும் வாழ்க்கை முறையும் என்ற தலைப்பில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணி சேலம் மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக பயணித்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த பேரணியின் போது பங்கேற்ற மாணவ மாணவிகள் புற்றுநோய் காரணங்களுக்கான மோசமான உணவு புகைப்பிடித்தல் மார்பகப்புற்றுநோய் அதற்கான அறிகுறிகள் தகுந்த சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டால் இந்த நோயை தள்ளிப் போடலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து பேரணியில் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் விதமாக இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மாநகர் மாவட்ட மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக மூன்று மாணவ மாணவிகள் இதற்கான பிரத்தியேக உடையை அணிந்து சம்பந்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.

Views: - 1

0

0