பீகார் தேர்தலில் பாஜக வெற்றி முகம் : கோவையில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்..!!

10 November 2020, 4:02 pm
Cbe bjp - updatenews360
Quick Share

கோவை : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கோவையில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக – ஜேடியூ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுதுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை விட சுமார் 30 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 130 தொகுதிகளிலும், காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 102 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

modi - nithish - updatenews360

40 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிவடைந்த நிலையில், பாஜக கூட்டணியே தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இதனால், பீகாரில் ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் கணபதி மண்டல் தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் பூவை தங்கம் ஆகியோரின் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கினர். மேலும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞரணி பொதுச்செயலாளர் நவீன், மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளர் ரபிக், ஓபிசி அணி செயலாளர் இளங்கோ குமார், மண்டல பொதுச் செயலாளர் விஜயன், பொருளாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 18

0

0

1 thought on “பீகார் தேர்தலில் பாஜக வெற்றி முகம் : கோவையில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்..!!

Comments are closed.