பாஜக பிரமுகர் வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி

22 August 2020, 2:34 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பாஜக பிரமுகர் வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி செய்ததால் போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரனா பாதிப்பை தொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பொது வெளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட, ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்து செல்ல தமிழக அரசு தடை விதித்து, இதனை தொடர்ந்து, இந்து முன்ணணி மற்றும் பி.ஜே.பி யினர் தடை மீறி கொண்டாட உள்ளதாக தெரிவித்து நீதி மன்றத்தையும் நாடினர். ஆனால் நீதிமன்றம் தமிழக அரசின் தடையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தது. இதனையடுத்து தமிழக முழுவதும் அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாஜக நிர்வாகியான கவுதமன் என்பவர் வீட்டு வாசலில் இன்று காலை விநாயகர் சிலை வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுவதாக தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் கவுதமன் வீட்டிற்கு சென்றனர். விநாயகர் சிலை வீட்டு வாசலில் இருந்து எடுத்து வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ளே வைத்து பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் இதனை ஏற்காத அவர் வெளியில் வைத்து தான் வழிப்பட போவதாக அறிவித்து வழிபாட்டில் ஈடுப்பட்ட முயன்றனர். இதனை தொடர்ந்து இந்து முன்ணணி மற்றும் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு கண்டேன்மென்ட் சரக காவல் துறை உதவி ஆணையர் மணிகண்டன் வந்து போச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பாஜகவினர் வீட்டின் வாசலின் முன்பு சிலையை வைத்து பூஜை செய்ய முடிவு செய்து வழிபாட்டில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 23

0

0