அரசின் விதிமுறைகளை மீறி படகில் பயணம் : அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

15 July 2021, 9:31 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் அரசு ஊழியர்கள் அரசின் விதிமுறைகளை மீறி படகில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதி அழகிய சுற்றுலா பகுதியாகும். இங்குள்ள ஏரியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதால் படகு பயணம் அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பழவேற்காடு ஏரியில் மீனவர்களைத் தவிர பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிஇல்லை. இந்த நிலையில் 6 அரசு வாகனங்களில் வந்த அரசு ஊழியர்கள் தங்கள் வாகனங்களை கரைபகுதியில் நிறுத்தி விட்டு 3 படகுகளில் 30க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு ஏரியில் தடையை மீறி பயணம் செய்துள்ளனர்.

படகு பயணம் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் பொது மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் அரசு வாகனங்களில் பயணித்து தடைசெய்யப்பட்ட படகு பயணம் மேற்கொண்டது பழவேற்காடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. படகு பயணம் மேற்கொண்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 41

0

0