பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி…

6 September 2020, 5:34 pm
Quick Share

திருவாரூர்: தமிழகம் முழுவதும் நாளை முதல் துவங்க உள்ள பொது போக்குவரத்து மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களின் தேவைக்கேற்ப இயக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் பேசியதாவது:- கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கொரோனா காலத்தில் இருந்த தடைகள் சிறிதுசிறிதாக தளர்வுகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் வசதி பயணிகளின் தேவைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு மட்டும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக அரசு 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சிறுசிறு சுணக்கம் இருந்தாலும் நெல்கொள்முதல் தேக்கம் ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0