வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் வழக்கு பதிவு: மாவட்ட ஆட்சியர் அருண் எச்சரிக்கை

15 September 2020, 10:36 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அருண், புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதம் 40% இருந்த கொரோனா தொற்று தற்போது 10% குறைந்துள்ளதாகவும், இறப்பு விகிதம் தற்போது 1.9% உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 70% நபர்கள் அட்மிட் செய்த 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த ஆட்சியர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்கவில்லை என்றும் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள். அரசின் விதிமுறையை மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் 50 பேர் மட்டுமே சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தும் தனியார் திருமண மண்டபத்தில் நடத்த திருமண நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் திருமண மண்டபத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது புதுச்சேரியில் 33% படுக்கைகள் நிரம்பி உள்ளதாக தெரிவித்த ஆட்சியர்,

மீதம் 67% படுக்கைகள் நோயாளிகள் தேவைக்காக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆக்சிஜன், வெண்டிலேட்டர், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கிட் போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 9

0

0