குற்றசம்பவங்களை தடுக்க பயன்பாட்டிற்கு வந்த சிசிடிவி கேமரா

6 November 2020, 7:52 pm
Quick Share

அரியலூர்: கீழப்பழூரில் குற்றசம்பவங்களை தடுக்கும் விதமாக 50 சிசிடிவி கேமரா பயன்பாட்டினை அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஊராட்சியில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நான்கரை லட்சம் மதிப்பிலான 50 சிசிடிவி கேமராக்கள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டினை அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கீழப்பழூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 14

0

0