தினசரி காய்கறி சந்தையில் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பு: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

8 July 2021, 1:28 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட குத்தகைதாரர்கள் மூன்று மடங்கு அதிகமாக வசூலிப்பதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் ஆர்கேவி சாலையில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது கொரோனா தொற்று காரணமாக வ.ஊ.சி மைதானத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.நேதாஜி காய்கறி சந்தைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் இருந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் மாநகராட்சி கடை ஒன்றிற்கு 16 ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 50 ரூபாயை குத்தகைதாரர்கள் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர் இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று தெரிவித்தார்.

Views: - 136

0

0