கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்

3 July 2021, 4:29 pm
Quick Share

மதுரை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேலபொன்னகரம் பகுதி குழு சார்பில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

மேலும் ஒன்றிய மோடிஅரசு பெட்ரோல் டீசல் கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே போவதாகவும், தற்போது சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டதாகவும், இப்படி விலைவாசியை உயர்த்தி மக்களை தினம் தினம் சாகடிப்பது ஆகவும், உடனடியாக பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பெண்கள் தலையில் முக்காடு போட்டு மாலை அணிவித்த சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

Views: - 76

0

0