வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை..!

Author: Udayaraman
3 August 2021, 8:07 pm
Quick Share

கோவை: கோவை அருகே வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செம்மேடு அருகே வெள்ளியங்கிரி பூண்டி கோவிலுக்கு செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண், மற்றும் 65 வயது மதிக்கத்தக்க பெண் என தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து ஆலந்துரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தலவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “இந்த தம்பதிகள் உள்ளூர் வாசிகள் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதால் கோவிலுக்கு வந்ததாக தெரிகிறது. இதுவரை அடையாளமும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், புதிதாக தாலி மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது. விசாரித்து வருகிறோம்.” என்றனர். வயதான தம்பதிகள் விஷம் அருந்தி சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 69

0

0