சோதனைச்சாவடியில் சிக்கிய கோடி கணக்கில் பணம்: 3 பேரிடம் தொடர் விசாரணை

22 October 2020, 11:11 pm
Quick Share

திருவள்ளூர்: எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து உரிய ஆவணம் இன்றிசொகுசு காரில் கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் பணம் மந்றும் ஒன்பது கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டம் ஸ்ரீராலா பகுதியிலிருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற சொகுசு காரினை மடக்கி சோதனை மேற்கொண்டதில், மாதவரத்தை சேர்ந்த அசோக் என்பவரிடம் 6 லட்ச ரூபாய் பணம், 9 கிலோ வெள்ளி மற்றும் சதீஷ்குமார் என்பவரிடம் 50 லட்சம், ரகுமான் என்பவரிடம் சுமார் 67 லட்சமும் என மொத்தமாக 1 கோடியே 23லட்சரூபாயை பறிமுதல் செய்தனர்.

மேலும் கார் ஓட்டுனர் சேக்அன்சார் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பின்னர் கைப்பற்றப்பட்ட சுமார் 1 கோடியே 23 லட்ச ரூபாய் பணம் மற்றும் 9 கிலோ வெள்ளி, நான்கு பேரையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். சொகுசு காரில் கொண்டுவரப்பட்ட பணம் நகை வாங்க கொண்டு செல்லப்பட்டதால் அல்லது ஹாவாலா பணமா என்பது உரியக விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Views: - 16

0

0