தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்…

Author: Udhayakumar Raman
4 September 2021, 1:58 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் சில மாதங்களாக பல லட்சம் மதிப்புள்ள தங்கம் தொடர்ந்து பிடிப்பட்ட வந்த நிலைகள் கடந்த வாரம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூபாய் 1.13 கோடி மதிப்பிலான 2,275 கிராம் கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேற்கொண்ட விசாரணையில் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வருவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதிகார சோதனையிட்ட அன்று பணியில் இருந்த சுங்கத் துறை ஆய்வாளர் அசோக் பணியிடைநீக்கம் செய்து சுங்கத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசோக் கடந்த ஒரு மாதம் முன்பு தான் விமான நிலையத்தில் பணி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலுக்கு உடந்தையாக செயல் பட்ட துணை ஆணையர் சரவணன் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 97

0

0