குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை

22 June 2021, 6:58 pm
Quick Share

அரியலூர்: இராயம்புரம் கிராமத்தில் உள்ள அரியாகுளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இறந்து போன மீன்களை அப்புறபடுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தில் ஆனந்தவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரியாகுளம். 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குளத்தின் நீரை பயன்படுத்த முடியவில்லை எனவும், எனவே இறந்து போன மீன்களை அப்புறபடுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 105

0

0