பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17 November 2020, 5:49 pmஅரியலூர்: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலந்தைக்கூடம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்,
மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் மாற்று திறனாளிகளை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.