ரயில் கட்டண சலுகை பறிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாற்றுதிறனாளிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

Author: kavin kumar
11 August 2021, 1:57 pm
Quick Share

தருமபுரி: மத்திய அரசு மாற்று திறனாளிகளுக்கு ரயில் கட்டண சலுகை பறிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தருமபுரி ரயில் நிலையம் முன்பு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு மாற்றுதிறனாளிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள ரயில் கட்டண சலுகை பறிக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருவூரான் தலைமையில் தருமபுரி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு மாற்று திறனாளிகளுக்கு ரயில் கட்டண சலுகை பறிக்கப்பட்டுள்ளது என்றும்,

அதனை மீண்டும் உடனடியாக வழங்க வேண்டும், ரயிலில் மாற்றுதிறனாளிகள் அவசரத் தேவைக்கு செல்லும் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதை நிறுத்த வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு என சிறப்பு பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மாற்று திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் பாலக்கோடு, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 191

0

0