நகராட்சிக்கு 10 சென்ட் நிலம் வழங்க அனுமதி மறுப்பு: ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முடிவு…

Author: kavin kumar
21 October 2021, 11:29 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் நகராட்சிக்கு 10 சென்ட் நிலம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் இன்று நடைப்பெற்றது. ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் 28 தீர்மானங்களை முன்வைத்து கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகராட்சிக்கு கொள்ளிட கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தரைமட்ட நீர்சேகரிப்பு தொட்டி அமைக்க அரியலூர் நகராட்சியின் சார்பில் 10 சென்ட் இடம் கேட்டதற்குண்டான தீர்மானம் வைக்கபட்டது. இதற்கு ஒன்றிக்குழு உறுப்பினர்களால் அனுமதி மறுக்கபட்டு நிராகரிக்கபட்டதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் சரஸ்வதிஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 168

0

0