ஓட்டல் கடை ஊழியர் மற்றும் பொதுமக்களை தாக்கிய நபருக்கு தர்ம அடி

6 March 2021, 3:33 pm
Quick Share

திருவண்ணாமலை: செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் கடை ஊழியர் மற்றும் பொதுமக்களை தாக்கிய நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த போலீசில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயா ஓட்டலில் புகுந்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்ற நபர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் கடையை அடித்து ஊழியர்களை கடுமையாக திடீரென தாக்கியுள்ளார். பின்னர் கடையின் வெளியே வந்த நபர் சாலையின் ஓரங்களில் இருந்த நபர்களையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சைகோ மனிதன் என நிலைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர் .

பின்னர் தகவலறித்து வந்த செங்கம் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சைகோ நபரை மீட்டு அழைத்து சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயன்றார். பின்னர் ஆட்டோவில் ஏற்றி செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஓட்டலில் புகுந்து ஊழியர் மற்றும் பொதுமக்களை சரமாரியாக தாக்கிய நபர் சைகோவா அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 3

0

0