75வது சுதந்திர தின விழா:தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

Author: kavin kumar
15 August 2021, 1:58 pm
Quick Share

தருமபுரி: 75 வது சுதந்திர தின விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களை வானில் பறக்க விடப்பட்டன.

அதனை தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பார்வையிட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூபாய் 52 இலட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டின் 75வது சுதந்திர தின விழா தருமபுரியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 573

0

0