காதலித்து திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்பு…
1 August 2020, 5:03 pmதருமபுரி: பாலக்கோடு அருகே காதலித்து திருமணம் செய்த வாலிபரை சடலமாக மீட்டு பஞ்சப்பள்ளி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்த காய்வியாபாரி மகாதேவனின் மகன் வாலிபர் விஜி (24), இவர் பெங்களூரில் சொந்தமாக காய்கறிகடை நடத்திவந்துள்ளார். மிகுனஅள்ளி கிராமத்தை சேர்ந்த (ராஜேஸ்வரி) தான் காதலித்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எதிர்ப்பையும் மீறி அதே பெண்ணை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று பெண் வீட்டு தரப்பிலிருந்து வாலிபரிடம் பேசவேண்டும், என கூறியதை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக சென்ற வாலிபர் விஜி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் கும்மனூர் அருகே சாலையோரம் வாலிபர் விஜி சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பஞ்சப்பள்ளி காவல்துறையினர் இன்று சடலத்தை மீட்டு திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிச்சனையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் வாலிபர் இற்நத சம்பவத்தை அறிந்த ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது, வாலிபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.